கடவுள் எங்கே இருக்கிறார்?

2:00 AM
கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"

"நிச்சயமாக ஐயா.."

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

"ஆம்."

"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா.."

"சாத்தா‎ன் நல்லவரா?"

"‏இல்லை."

"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?"

"கடவுளிடமிருந்துதா‎ன்."

"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?"

"ஆம்."

"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"

......

"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"

.......

"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"

"ஆம் ஐயா.."

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?"

"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."

"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?"

"நிச்சயமாக உள்ளது."

"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?"

"நிச்சயமாக."

"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது."

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"

"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."

"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?"

"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?"

"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."

"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"

"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?"

""இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்.

"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"

(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"

(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?"

"அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று."

"மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!"

"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

நமது மு‎ன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

-----------------------
Read On 0 comments

காதல் என்பது வெங்காயம்..

2:36 AM

காதல் என்பது வெங்காயம்....
கண்டவுடன் காதல்.
அழகான வானவில்.
மழைநின்றதும் மறைந்துவிடும்.

----------------

காதல் ஒரு வெங்காயம்.
உரித்தால் ஒன்றுமில்லை.
வெட்டினால் கண்ணீர் வரும்.

---------

காதலுக்காக உயிர் கொடுப்பேனென்றாய்.
வேண்டாம்.
எனது உயிரை எடுக்காமல் இருந்தால் போதும்.

----------

காதலிப்பது
அறிவோடு யோசிப்பது.
இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

---------

உண்மையான காதல் என்பது பேய் பிசாசை போல
எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம்.
யாராவது ஓரிருவர்தான் அதைப் பார்த்திருக்கிறார்கள்.

---------

காதலில்லாத வாழ்க்கை வெறுமையானது.
ஆனால் காதலை விட அந்த வெறுமை மிக மேலானது.

----------

காதலென்பது ஒரு புதைகுழி.
எத்துணை ஆழம் நாம் அதில் இறங்குகிறோமோ
அத்துணை கடினம் அதிலிருந்து வெளியேறுவது.

----------

உலகத்தின் காதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.
பெரும்பாலானவை கல்யாணத்தில் முடிவதில்லை.
மற்றவை கல்யாணத்தோடு முடிந்து போகின்றன.

------------


காதலுக்கு கண்ணில்லை.
கண்மூடி கிடக்கும் வரை அது நீடிக்கிறது.
கண்திறந்தால் காணாமல் போகிறது.

------------

காதல் ஒரு கவசம்.
மனிதம் அதற்குள்தான் தன் காமத்தை மறைத்து வைத்திருக்கிறது.

காதலில்லாத காமம் சாத்தியம்.
காமமில்லாத காதல் ????

-------------

காதல் கணத்தில் தோன்றுகிறது.
நாட்கள் செல்ல வெளிப்படுகிறது.
மாதங்கள் வருடங்களில் வளர்கிறது.
மறக்கப்படுவதற்கு ஒரு வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறது.

----------

பிப்ரவரி 14
இன்னுமோர் முட்டாள்கள் தினம்.

---------

காதல் என்பது கடவுள்.
நான் நாத்திகவாதி.
இரண்டையுமே நம்புவதில்லை.
Read On 1 comments

நட்புக்கு கூட கற்புகள் உண்டு

10:09 AM

நட்புக்கு கூட கற்புகள் உண்டு



ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொருத்தனா கெளம்பும் போது

ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்

ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...



அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ

அரை குறையா குளிச்சதுண்டு

பத்து நிமிஷ பந்தயத்துல

பட படன்னு சாப்டதுண்டு



பதட்டதோட சாப்பிட்டாலும்

பந்தயத்துல தோத்ததில்ல,

லேட்டா வர்ற நண்பனுக்கு

பார்சல் மட்டும் மறந்ததில்ல!



விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறப்போ

'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு

ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,

வேற எதுவும் யோசிக்காம

வேகவேகமா திரும்பிடுவோம்

வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,

இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!



'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா

கடங்கார professor கழுத்தறுப்பான்...

assignment எழுதாத பாவத்துக்கு

நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!



கேலி கிண்டல் பஞ்சமில்ல,

கூத்து கும்மாள குறையுமில்ல,

எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா

H.O.Dய கூட விட்டதில்ல!



ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா

அத அடிப்பான் காபி அந்தபக்கம்...

ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து

ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!



பசியில யாரும் தவிச்சதில்ல

காரணம் - தவிக்க விட்டதில்ல...

டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்

சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!



அம்மா ஆசையா போட்ட செயினும்

மாமா முறையா போட்ட மோதிரமும்

fees கட்ட முடியாத நண்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல ...



சட்டைய மாத்தி போட்டுக்குவோம்

சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்

முகவரி என்னன்னு கேட்டதில்ல!



படிச்சாலும் படிக்கலன்னாலும்

பிரிச்சி வச்சி பாத்ததில்ல...

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்

அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!



வேல தேடி அலையுறப்போ

வேதனைய பாத்துப்புட்டோம்

'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!



ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு

ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ

மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...

பக்குவமா இத கண்டும் காணாம

நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ

'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு

சமாளிச்சி எழுந்து போவோம்...



நாட்கள் நகர,

வருஷங்கள் ஓடுது,

எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது

"Hi da machan... how are you?" வுன்னு...



தங்கச்சி கல்யாணம்,

தம்பி காலேஜி,

அக்காவோட சீமந்தம்,

அம்மாவோட ஆஸ்த்துமா,

personal loan interest,

housing loan EMI,

share market சருக்கல்,

appraisal டென்ஷன்,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம

'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு

இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

.

.

.

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,

நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!



இ-மெயில் இருந்தாலும்

இண்டர்னெட் இருந்தாலும்

கம்பெனியில ஓசி phone இருந்தாலும்

கையில calling card இருந்தாலும்

நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க

நெனச்சாலும் முடியறதில்ல

பழையபடி வாழ்ந்து பாக்க!



அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்

'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்

'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!



கல்யாணத்துக்கு கூப்பிட்டு

வரமுடியாமா போனாலும்,

அம்மா தவறின சேதி கேட்டதும்

கூட்டமா வந்தெறங்கி,

தோள் குடுத்து தூக்கி நிறுத்தி

பால் எடுத்தவரை கூட இருந்து

சொல்லாம போக வேண்டிய இடத்துல

செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்

தேசம் கடந்து போனாலும்

பாசம் மறந்து போகாது!

பேசக் கூட மறந்தாலும்

வாசம் மாறி போகாது!

வருஷம் பல கழிஞ்சாலும்

வரவேற்பு குறையாது!

வசதி வாய்ப்பு வந்தாலும்

'மாமா' 'மச்சான்' மாறாது!
Read On 0 comments

இன்னொரு சுனாமி.. கவிதை

11:11 AM

கடற்கரையில் நீ நடந்து போகாதே.!
உன்னை தொட்டு போகும் முயற்சியில்..!
கடல் அலைகள் சீறி வரும்..!
வேண்டாம்!..இன்னொரு சுனாமி...!....!
Read On 0 comments

காதல் வந்திடுச்சா?-கவிதை

6:14 AM

காதல் வந்திடுச்சா ?
விழி மோதிச்சிதறும்போது
மொழி சிக்கித்திணறும்

அக்கினியில் வீழ்ந்தாலும்
அண்டார்டிக்கா குளிர் தோன்றும்

இலையுதிர்காலத்திலும்
இடைவிடாது தூறல் வீசும்

அந்தரத்தில் பறந்துகொண்டு
அதிசயங்கள் செய்யவைக்கும்

நரி ஊளையுடும்போதும்
நடனம் ஆடத்தோன்றும்

சூரியச்சூட்டிலும்
சுகமான இன்பம் தோன்றும்

வான் இடிந்து வீழ்ந்தால்கூட
வாய்பிளந்து பார்க்கத்தோன்றும்

என்னவோ நடக்கும்
எதுவுமே தொடர்பில்லை

தன்னிலை மறக்கும்
தனிமையில் சிரிக்கும்

காதலித்துப்பார்
கவலையெல்லாம் பறந்துபோகும்
Read On 0 comments

காதல் வந்தும் சொல்லாமல்-பாடல்

6:54 AM

படம்-டிஷ்யூம்
பாடல்-காதல் வந்தும் சொல்லாமல்,நெஞ்சுக்குள்ளே

ஆண்:
காதல் வந்தும் சொல்லாமல்,நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை, கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே

பெண்:
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை, கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ?

ஆண்:
இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பலதுளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!

பெண்:
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!

ஆண்:
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு, பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...

பெண்:
விதியின் கைகளோ வானம் போன்றது,
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது...

பெண்:
நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா? காதல் கதறி இங்கு அழுகிறதே, இரண்டு கண்ணும் அதில் கருகாதா!

ஆண்:
ஏன்தான் காதல் வளர்த்தேன்,அதை ஏனோ என்னில் புதைத்தேன்... சுடரில்லாத தீயில் எரிகின்றேன்,சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்...
பெண்ணே......உன் பாதையில் நகரும் மரமாகுவேன்... இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ... இதயம் கொண்டு போனால் என்னடி

(காதல் வந்தும்)
Read On 0 comments

இது என்ன இது என்ன- பாடல் வரிகள்

6:36 AM

படம் - சிவகாசி
இது என்ன இது என்ன

[ஆண்]
இது என்ன இது என்ன புது உலகா?
ஆணுக்கும் பெணுக்கும் தனி உலகா?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா?
கருப்பையில் காதல் கருவுருமா?
வரவும் செலவும் இதழில் நிகளும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்

[பெண்]
இது என்ன இது என்ன புது உலகா?
ஆணுக்கும் பெணுக்கும் தனி உலகா?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா?
கருப்பையில் காதல் கருவுருமா?
ஆடடா ஊரக்கும் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இணைக்கும்

[பெண்]
பெணுக்குள் ஆண் வந்தால் காதலா?
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா?

[ஆண்]
நீ எந்தன் உயிருகுள் பாதியா?
நான் என்ன சிவனோட ஜாதியா?
மனசுகுள் பூ பூக்கும் நேரம் தானோ?
வாசதில் உன் வாசம் தானோ?
இடையில் வருமை நிமிர்தால் பெருமை
இலமை இலமை இணைத்தால் புதுமை

[பெண்]
இது என்ன இது என்ன புது உலகா?
ஆணுக்கும் பெணுக்கும் தனி உலகா?

[ஆண்]
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா?
கருப்பையில் காதல் கருவுருமா? ?

[ஆண்] கண்ணுகுள் கண்ணை வைத்து பாரம்மா?
நெஞ்ஜிகுள் நீயும் என்ன தூரமா?

[பெண்]
பெண்ணுகுள் என்னமோ தொணுமா?
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா?

Read On 0 comments

ஒரு முறை பிறந்தேன், ஒரு

6:31 AM
படம்-நெஞ்சிரும் வரைக்கும்
ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன

1. ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்

2. நீயே என் இதயமடி, நீயே என் ஜீவனடி

உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை வரலாகுமா
சின்னதாக நீயும்தான்
முகம் சுழித்தால் மனம் தாங்குமா
உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விடமாட்டேன்
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்
ஒரே உடல், ஒரே உயிர், ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே

காற்று வீசும் மாலையில்
கடற்கரையில் நடை போடணும்
உன்மடிதான் பாய்மரம்
படகேறி திசைமாறணும்
ஒளி வீசிடும் இரு கண்கள்தான்
வழி காட்டிடும் கலங்கரையா
கரைசேரவே மனம் இல்லையே
என தோன்றினால் அது பிழையா
நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து
பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்
நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா

Read On 0 comments

நேற்று இல்லாத மாற்றம் என்னது

6:27 AM
படம் - புதியமுகம்
நேற்று இல்லாத மாற்றம் என்னது

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவையொன்று தானே கற்று வேசும்வரை

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா?
Read On 0 comments

லேசா லேசா நீயில்லாமல்

6:22 AM
படம் - லேசா லேசா

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா






லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோவில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே


நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் பாலாச்சு
கொல்லாமல் என்னைக்கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனியிரவும் அனல் மழையை பொழிகிறதே


வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வங்கும் மூச்சுக்காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
நீயென்றால் நான் தானென்று உறவறிய ஊரறிய
ஒருவரில் ஒருவரின் உயிர் கரைய
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது
Read On 0 comments

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

6:14 AM
படம்-உயிரே
பூங்காற்றிலே உன் சுவாசத்தை

பெண்- ஓ........ கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகல் வருவதில்லை........(3)

ஆண்- பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன்.....
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத்தேடி தேடி பார்த்தேன்.....
உயிரின் துளி காயும் முன்னே என்விழி உனை காணும் கண்ணே...
என் ஜீவன் ஓயும் முன்னே ஓ...டோடி வா............... (பூங்காற்றிலே உன்)

காற்றின் அலைவரிசை கேட்கிறதா....
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகிறதா......
காற்றில் கண்ணீரை ஏற்றி........
கவிதை செந்தேனை ஊற்றி...
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்....
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓ.....டோடி வா....
(பூங்காற்றிலே உன்)

பெண்- ஓ........ கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகல் வருவதில்லை........(3)

காணும் எங்கும் உன் விம்பம் ..ஆனால் கையில் சேரவில்லை..
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை..
உயிரை வேரோடு கிள்ளி ...என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி....ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓ..டோடி வா.......... (பூங்காற்றிலே உன்)
Read On 0 comments

காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே

6:00 AM
படம் - ரோஜா
காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே











காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண் மூடிப்பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமிபார்த்த வானமே புள்ளியாகத் தேய்ந்து போ
பாவையில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்
Read On 0 comments

காதல் பரிசு!

5:27 AM

அன்று வெகு நேரமாகியும் உறங்க மனம் இல்லாதவளாய் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் ராதா. மனதில் ஓர் பாரம் நிறைந்து கொள்ள… அவள் கண்களிலிருந்து வடிந்து ஓடிய கண்ணீர் தலையணையையும் நனைத்திருந்தது. ராதாவிற்கு பஞ்சனை முள்ளாய்க் குத்தியது. படுக்கப் பிடிக்காமல் எழுந்த ராதா ஜன்னலருகே சென்று ஜன்னலினூடே தன் பார்வையை மேயவிட்டாள்.


ஏதேதோ சிந்தனையில் ஊறிப் போய் நின்றவளும்… திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய்… திடுக்கென தன் கையைத் தூக்கி மணிக்கட்டைப் பார்த்தாள்.


ஓ… நேரம் எப்படிப் போனதோ தெரியவில்லை… என நினைத்தவளாய்… விரைந்து சென்று ரெலிபோனை எடுத்தாள்.


ம்… ராகவன் இப்போது வேலைக்கு வந்திருப்பான்… என மனதிற்குள் நினைத்துக் கொண்டவளாய்… அவனின் நம்பரைச் சுழற்றினாள்.


அலுவலகத்தில் தன் வேலையில் மூழ்கியிருந் தவனுக்கு அவனுடைய செல்போனின் சிணுங்கல் சத்தம் அவனைத் திசை திருப்ப… போனை எடுத்தவனும


ஹலோ… என்றான்…. மறுமுனையில் ராதா.


ஹாய் ராதா… என்னடி இந்த நேரத்தில…?


ஓ… ஏன் நான் எடுப்பதற்கும் நேரம் ஒதுக்கி வைத்திருக்கிறாயாடா?


அப்படியில்லையடி… ம்… சரி இப்போ ஏன் எடுத்தாய்?


ஏன்டா? நான் போன் எடுக்கக் கூடாதா என்ன?…உன் நினைவு வந்துது அதுதான் எடுத்தன். உன்னைப் போலவாடா நானும்?… எந்த நேரமும் உன் நினைவோடு, தனியே போராட்டம் நடத்துவது உனக்கு எங்கடா புரியப் போகுது?


ஏனடி இப்படிச் சலிச்சுக் கொள்ளுறாய்?… எனக்கு மட்டும் உன் நினைவு இல்லையா என்ன? எனக்குள்ளும் நீதானேயடி முழுசாய் நிறைஞ்து இருக்கிறாய்?


ம்…ம்… எனக்குத் தெரியும் தானேடா. சும்மா சீண்டிப் பாத்தன். அவ்வளவுதான். டேய்…. உன்னைப் பார்க்க வேணும் போல இருக்கடா… இண்டைக்கு வாறியா?… அதோட ஓர் முக்கிய விசயம் ஒன்றும் உனக்குச் சொல்ல வேணும் …


என்ன?… மகாராணிக்கு எண்டைக்குமே இலாத வேண்டாத தவிப்பு இண்டைக்கு?… சரி… என்ன ஏதோ முக்கிய விசயம் என்று இழுக்கிறாய்?… என்ன?


ஓ… ஏண்டா சொல்லமாட்டாய்?… ம்… எண்டைக்கும் இல்லாத தவிப்பா இண்டைக்கு எனக்கு? நேரில் வாடா உன்ன பாத்துக் கொள்ளுறன்… ராகவா!… ப்ளீஸ்டா… இண்டைக்கு வாவேண்டா…


ஓ!… அப்படியா? சரி. ராணியம்மா உத்தரவிட்டா தட்டவா முடியும்? சரி சரி வேலை முடிஞ்சதும் வாறனே…


ம்…. என் ராகவன் எண்டா என் ராகவன்தான்… சரிடா மாலை சந்திப்போமே… என்று சொல்லி ரெலிபோனை வைத்தாள் ராதா.


அவள் காத்திருந்த அந்த மாலைப் பொழுதும் வந்தது. ராகவனுடைய வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் ராதா.


அந்த இனிய மாலைப் பொழுதிலே என்றுமே இல்லாத ஏதோ ஒருவித புதுவித தவிப்பு அவள் உள்ளத்தை ஊடறுத்து கொண்டிருக்க… அவளின் நினைவுகள் யாவுமே பின்நோக்கிச் சிறகடித்துப் பறந்தன.தினசரி ராதா வேலைக்கு போகும் அதே பஸ்ஸில்தான் ராகவனும் பயணம் செய்வான். முதலில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து விட்டு தம்பாட்டுக்கு தமது பயணத்தை தொடர்ந்தவர்களின் பயணத்தில் இடையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இருவருக்குள்ளும் சிறு நெருக்கம் ஏற்பட்டது. காலப் போக்கில் அந்த நெருக்கம் நட்பாக மாறியது. ஒருவரை ஒருவர் அறியாமல் இருவருக்குள்ளும் பல மாற்றங்கள்.


ஒருவருக்காக ஒருவர் காத்துக் கிடப்பதும் காணாத வேளைகளில் தவித்துப் போதலும் தானாகவே உருவாகத் தொடங்கின. இந்த வேளையில் ஓர் நாள்…


ராதா உங்களுடன் ஓர் முக்கிய விசயம் கதைக்க வேணும்…


முக்கிய விசயமா? அப்படி என்ன முக்கிய விசயம் ராகவன்?


ம்… இனியும் சுற்றி வழைச்சு இழுத்தடிக்க எனக்கு விருப்பமில்ல ராதா. நான் நேரடியாக விசயத்துக்கு வாறன். எனக்கு உங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு. உங்களையே நான் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறன். உங்கள என் எதிர்கால மனைவியாக்க விரும்பிறன் ராதா.


என்ன ராகவன் நீங்கள் சொல்லுறீங்கள்?


உங்களப் எனக்கு பிடிச்சிருக்கு. உங்கள மனதார விரும்புறன் எண்டு சொல்லுறன்.


என்ன விளையாடுறீங்களா?


நான் ஏன் ராதா உங்களோட விளையாடுறன்?உண்மையத்தான் சொல்லுறன். எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு.


ராதா எதுவுமே பேசாது மறு பக்கம் திரும்பி மௌனமாய் நின்றாள்.


ஏன் ராதா? நான் ஏதாவது தப்பா சொல்லி விட்டேனா? எதுக்கு மௌனம்? ஏன் என்னை பிடிக்கேல்லையா?


அப்போதும் ராதா பதில் எதுவும் சொல்லாது மௌனமாக நின்றாள்.


சரி ராதா… உடன பதில் சொல்லக் கஸ்ரம் என்றால்… யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்கோ. நல்ல முடிவொன்றை யோசிச்சுச் சொல்லுவீங்கள் என்று எதிர்பார்ப்போட நான் காத்திருப்பன்… என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டகன்றான் ராகவன்.


வாரங்கள் சில கழிந்தன. ஒவ்வொரு நாளும் பஸ்ஸில் இருவரும் சந்தித்துக் கொண்ட போதும்… ராதா பதில் எதுவுமே கூறவில்லை. அவன் நினைவுகள் யாவுமே இரவும் பகலும் அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தன.


உள்ளம் அவளுக்காகவும்… அவளின் நல்ல முடிவுக்காகவும் ஏங்கி ஏங்கித் தவித்தது. ஆனால் அவளோ அது பற்றி எதுவுமே கதைக்கவில்லை. அவளின் அந்தப் போக்கை தாங்கிக் கொள்ள முடியாதவனாய்த் தவித்தான் ராகவன்.


அன்றும் வழமை போலவே அதே பஸ்ஸில் வந்து ஏறி கொண்டாள் ராதா. அன்று அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள்.


நெற்றியில் சின்னதாய் ஒரு கறுப்பு ஸ்ரிக்கர் பொட்டு, காதுகளில் சின்னத் தோடுகள், கழுத்தில் புரளும் மெல்லிய சங்கிலி, கையில் ஒற்றை வளையல், மெல்லிய நீல நிறத்தில் ஆடை… பார்ப்பவர்கள் மீண்டும் ஒருமுறை சலனம் இல்லாமல் அவளது அழகைப் பார்க்கலாம். ம்… பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அந்த அழகு அவனைக் கொள்ளையடித்து கொல்லாமல் கொன்றது. இன்று எப்படியாவது அவளின் முடிவைக் கேட்டு விடவேண்டும் என நினைத்தவனாய்…


என்ன ராதா. நான் என்ர காதல மனம் திறந்து சொல்லி எத்தின நாளாச்சு? நீங்கள் இதுவரை ஒரு பதிலும் சொல்லேல்லயே?… என்றான் ராகவன்.


ராதாவின் மனதிற்குள்ளும் ராகவன் முழுதாக நிறைந்தே இருந்தான். அவனுடைய அமைதியான போக்கு, அன்பான பேச்சு அவளுக்கும் மிகவும் பிடித்தே இருந்தது. அவள் மனதை அவன் என்றோ திருடி விட்டிருந்தான் என்பதுதான் உண்மை.


எதற்கெடுத்தாலும் புருவத்தை உயர்த்தி, கண்களை அகல விரித்துச் சிரிக்கும் அந்த அழகிய சிரிப்பு எப்போதுமே அவளை இம்சை செய்து கொண்டே இருந்தது. ஆனாலும் அவளுக்குள் ஓர் தயக்கம்.


" என்ன ராதா யோசிக்கிறீங்கள்? ஏன் என்னை பிடிக்கேல்லயா?"


அப்படியில்ல ராகவன். நான்தான் ஓர் அனாதையாச்சே. உங்களுக்குத்தான் நான் ஏற்கனவே என்னைப் பற்றி எல்லாமே சொல்லி இருக்கிறனே? என்னை எப்படி?… என இழுத்தாள்.


ராதா… நான் உங்களத்தான் விரும்புறன். உங்களுக்கு பின்னால இருக்கிறவங்களையும் விரும்பேல்ல… உங்களுக்கு பின்னால எத்தின பேர் இருக்கினம் என்றும் நான் கேக்கேல்லயே?


"இல்லை ராகவன். என்னை உங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளுவாங்களா?"


ராதா… உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?.. இல்லையா? அதுதான் எனக்கு வேணும். மற்றவங்களப் பற்றி நீங்க யோசிக்க வேண்டாம். yes or no . இப்ப நீங்க எனக்குச் சொல்லியே ஆக வேணும்.


நாணம் அவளை ஆட்கொள்ள… பஸ்ஸின் வெளிப் பக்கம் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டு மெல்லிய குரலில்…


"உங்களை எனக்கு பிடிச்சிருக்கு ராகவன்"….. என்றாள்.


அவளின் பதில் கேட்டு அவன் உள்ளம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது. சந்தோசம் பெருக்கெடுத்தோட யாருமே பார்த்திடாத வண்ணம் அவளின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான் ராகவன்.


---------------


யாருமில்லாதவளாய், எதிலும் பிடிப்பற்றவளாய் வாழ்ந்து கொண்டிருந்த ராதாவுக்கு ராகவனைக் கண்ட பின்பே வாழ்க்கை என்பதன் அர்த்தம் புரியத் தொடங்கியது.ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பு, பாசம், நேசம், காதல், பரிவு ஒருவருக்காக ஒருவரின் விட்டுக் கொடுப்புக்கள் எல்லாம் அவள் மனதில் நிறைந்து காதலாய்ப் பூத்திருந்தது. அன்று தொடக்கம்… ம்… இன்று நேற்றல்ல 5 வருடங்களாகவே அவனுக்காக அவள் காத்திருக்கிறாள்.


ஆழ்ந்த சிந்தனையில் சிறகடித்துப் பறந்தபடி… அவளின் வீட்டு மாடியில் நின்று ஜன்னூடாக வெளியே பார்த்த படி… ராகவனின் வருகைக்காகக் காத்து நின்றாள் ராதா. அப்போது …


பீப்… பீப்…. என கார் கோனின் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தாள். அவள் கண்கள் சத்தம் வந்த திசையை நோக்கின.


ஓ!… அதோ… அதோ… என் ராகவன் வருகின்றான் என்பதை அவள் கண்கள் கண்டு சொல்ல… மாடியிலிருந்து இறங்கி ஓடினாள் ராதா.


"ஏய்… ராதா சுகமா இருக்கிறியா?…"


"ஆமாண்டா ராகவா"… என செல்லமாய்க் கூறியவாறே ஒரு பக்கம் தன் தலையைச் சாய்த்தவாறே.. புன்முறுவலுடன் தலையை அசைத்தபடி நின்றாள் ராதா.


"என்ன ராதா? என்ன நடந்தது? முகத்தில உற்சாகத்தைக் காணோம்? கலகலப்பைக் காணோம்? சந்தோசத்தைக் காணோம்? என் மகாராணிக்கு என்ன நடந்தது? என்ன உடம்புக்கு நல்லா இல்லயா?…" என பதறியபடி ராகவன் கேட்கவும்…


"சீச்சீ… இல்லடா ராகவா… நான் எப்பவும் போல நல்லாத்தானே இருக்கிறன். மதியம் சாப்பிட்ட சாப்பாடுதான் இன்னமும் சமிக்கேல்ல…" என்றாள்.


"அது சரி. எதையும் அளவோட சாப்பிட வேணும் ராதா. அதை விட்டிட்டு அளவுக்கு மீறிக் கொட்டி, போட்டுத் தாக்கினால் இப்படித்தான்…" என கிண்டலடிக்கவும்…


"போடா உனக்கு எப்பவும் கிண்டல்தான்…


"என்ன ராதா முக்கியமான விசயம் உடனடியாக வா என்றாயே? அப்படி என்ன விசயம்?"….


"ம்… அதுக்கு வந்ததும் வராததுமாய் என்ன அவசரம்? உனக்கு எல்லாத்திலும் ரொம்பவும் அவசரம் தாண்டா. களைச்சுப் போய் வந்திருக்கிறாய். முதல்ல குளிச்சிட்டு வாடா … பிறகு ஆறுதலாய்க் கதைக்கலாம்" என்றாள்.


அவள் சொன்னதும் மறுவார்த்தை எதுவும் பேசாது எழுந்த ராகவனும்… குளித்து விட்டு வந்தான். வேலை முடிந்து வந்தவன் பசியோடு இருப்பான் என்பதை உணர்ந்தவளாய் அவனைச் சாப்பிடும் படி கூறினாள். அவன் வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொள்ளவும் . அவளும் அன்பாக உணவைப் பரிமாறினாள்.


"என்ன ராதா? என்ன விசயம் என்று சொல்ல மாட்டியா?"…


"சாப்பிடும் போது கதைக்கக் கூடாது என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவா…. கதையை விட்டிட்டு முதல்ல சாப்பிடடா"…. என்று அன்பாகக் கடிந்து கொண்டாள்.


"ம்… இப்போ சாப்பாடும் முடிஞ்சுது. இனியும் என் பொறுமையைச் சோதிக்காதே ராதா." என்றான்.

சிறிது நேரம் தயங்கி நின்ற ராதாவும்..


"ராகவன் வந்து… வந்து… என இழுத்தபடி…. என்மேல உனக்கு கோவம் வராதே?… என்றாள்.


"உன்மேல நான் கோவம் கொள்வதா?… நானா?… என்ன பைத்தியமா உனக்கு?… உன்மேல் கோவம் வா என்று சொன்னாலும் எனக்கு வருவதில்லையே… புதிர் போடுறதை விட்டு விசயத்தை சொல் ராதா"… என்றான்.


அவள் வெட்கத்தால் தன் இரு கைகளாலும் தன் முகத்தைப் பொத்திக் கொண்டு…


" ராகவன் வந்து… வந்து… நான் கர்ப்பமா இருக்கிறன்"… என தயக்கியபடி கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்டதும் கதிரையில் இருந்த ராகவன் சடாரென எழுந்தான். ராதா ஓர் கணம் திடுக்கிட்டு சற்று விலகி நின்றாள். எழுந்த ராகவன் அப்படியே ராதவைத் தூக்கி… ஓர் சுற்றுச் சுற்றி… சந்தோசக் கூத்தாடினான்.


------------------------



"ராதா!… எவ்வளவு பெரிய ஓர் சந்தோசமான விசயம் சொல்லி இருக்கிறாய். இதுக்குப் போய் எதுக்கு பயந்து… தயங்கி… பைத்தியம்… பைத்தியம்… என அவளை அன்போடு அணைத்து உச்சி மோந்தான்…"ராதா எங்க… உடனடியா என்னோட கிளம்பு…"



" எங்கே ராகவன்?


அதொன்றும் சொல்ல மாட்டன். முதல்ல கிளம்பி வா… என ராகவன் சொல்லவும், ராதாவும் பதில் எதுவுமே கூறாது வெளிக்கிட்டு அவனுடன் சென்றாள்.



நேராக கோயிலை நோக்கிச் சென்றது அவனின் கார். காரிலிருந்து இறங்கியவனும் அந்தச் சந்நிதானத்திற்குச் சென்று ஐயரிடம் சொல்லி ஓர் அர்ச்சனை செய்தவாறே அந்தச் சாமி சாட்சியாக… அங்கே ஐயர் கொடுத்த அந்த மஞ்சல் கயிற்றை அவளின் கழுத்தில் கட்டினான்.



"ராகவா!…" என அவள் அழைத்தவாறே விழியை மேலே உயர்த்தி அவனைப் பார்த்தாள்.



"ராதா!… எதுவும் பேசாதே… என்று அவனின் பதில் வந்தது. ராதாவும் அவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமைதியானாள்.



இரவுப் பொழுது… படுக்கை அறையில் ராகவனின் நெஞ்சில் சாய்ந்தவாறே அமைதியாக இருந்தாள் ராதா… அவளின் அமைதியைக் கலைத்தவனாய்…



"ராதா… என்மேல உனக்கு கோவமா?"



"எதுக்கு? "



"இல்ல… ஊரறிய உலகறிய உனக்கு நான் தாலி கட்டல்ல என்று வருத்தப்படுகிறாயா?…"



"இல்ல ராகவன். உன்னை விட்டால் எனக்கென இந்த உலகில் யாருடா இருக்கிறார்கள்? நீ தானேடா எனக்கு எல்லாமே. இந்த ஆடம்பரம் ஒன்றும் எனக்கு தேவையில்லை. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் உங்கட வீட்டில தெரியாம செய்ததை நினைக்க ஒரு மாதிரி இருக்கு அவ்வளவுதான்."



"ராதா!… என் அப்பா இறந்ததால குடும்ப சுமைகளை எல்லாம் நான் மட்டுமே சுமக்க வேண்டி இருந்ததால உன்னைக் கூட இவ்வளவு காலமும் தனிய இருக்க விட்டிட்டன். இரண்டு அக்காமாரையும் நல்ல மாதிரி கரை சேர்த்து விட்டன். இந்த வருடத்தோட என் தங்கையின் திருமணமும் முடிய உன்னை வீட்டார் சம்மதித்தாலும் சரி, சம்மதிக்காவிட்டாலும் சரி உன்னையே கல்யாணம் செய்வதாவே நான் முடிவு எடுத்தன். ஆனால்… நீ இப்போ என் வாரிசையும் சுமக்கிறதால, உன்னை மேலும் வேதனைப்படுத்த நான் விருப்பேல்ல. நீ என் மனைவியாக… என் வாரிசை சுமக்கிறாய்… என்ற சந்தோசத்தை தரவே நான் இந்த முடிவை எடுத்தேன் ராதா"…



அவன் கூறியதைக் கேட்டு, அவள் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர்த் துளி அவன் நெஞ்சில் விழுந்தது.



"ஏய் ராதா?… எதுக்கு இப்ப கண்ணீர்? நீ இனி அழக் கூடாது ராதா. எப்பவும் சிரித்து சந்தோசமா இருக்க வேணும்…" என்று கூறியவாறு அவளை அன்போடு இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.



மறு நாள் அவளிடமிருந்து விடைபெற்று வந்து கொண்டிருந்தவனுக்கு ராதாவை நினைத்துப் பார்த்த போது வேதனையாக இருந்தது. எனக்காக, என்னையே நம்பி என் பொறுப்புக்கள் முடியும் வரை காத்திருப்பேன் என்று இன்று வரை என்னையே நம்பிக் காத்திருந்தாளே… இப்போது என் வாரிசைச் சுமந்து கொண்டும் தனியே எனக்காகக் காத்திருக்கிறாளே… இதுவரை ஒரு நாள் கூட எனக்கு எந்தக் கஸ்ரமும் அவள் தந்ததே கிடையாதே. எவ்வளவு நல்ல மனம் கொண்டவள் அவள்? அப்படிப்பட்டவளை நான் இப்படித் தனியே தவிக்க விடலாமா?… என நினைத்துப் பார்த்த போது அவனின் நெஞ்சம் சோகத்தால் அடைத்தது.



தன்னை, தன் நிலமையினை ஓர் தடவை எண்ணிப் பார்த்தான். அகத்தே தனது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பொறுப்புக்களையும், துயரங்களையும் தாங்கி வதைப்படும் பரிதாப நிலையை எண்ணிப் பார்த்து… தனது அக வாழ்வுக்கும் புற வாழ்வுக்கும் உள்ள பள்ளத்தை அளந்து பார்த்த போது அவனுக்கு தன் மீதே வெறுப்பு வந்தது.



ஆனாலும் என்ன செய்ய முடியும்? தனக்கு தலையில் எழுதப்பட்ட விதி என எண்ணிய ராகவன் பெரிய பெரு மூச்சொன்றை வெளியே விட்டு நெஞ்சை ஆற்றிக் கொண்டான்.



மாதங்கள் மிக விரைவாக ஓடிக் கழிந்தன. அன்று திடீரென சொல்போனின் சிணுங்கல



"ஹலோ… ராகவன் சார் நிக்கிறாங்களா?"



"ஆமாம்… நான் ராகவன்தான் பேசுறன்."



"நான் டாக்ரர் பேசுறேன். உங்கள் மனைவி ராதா இங்கே மருத்துவமனையில் அவசரமா அனுமதிக்கப் பட்டிருக்கிறாங்க. நீங்க உடனடியா வாங்க."



"ஓ… அப்படியா? எந்த மருத்துவமனை?… டாக்ரர்… ராதாவுக்கு ஏதாவது ஆபத்தா? "… துடித்துப் போய் அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே… அவசர அவசரமாய் விலாசத்தை நோட் பண்ணிக் கொண்ட ராகவனும், உடனடியாய்ப் புறப்பட்டு அங்கே விரைந்து சென்றான்.



அங்கே பிரசவ அறையில் ராதா போராடிக் கொண்டிருந்தாள். ராதா வலியில் துடிப்பதைக் கண்டு அவன் ஓர் கணம் ஆடியே போனான். ஆனாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளின் தலையைத் தடவியவாறே ராதாவிற்கு தைரியம் சொன்னான்.



போராட்டம்… போராட்டம்… வலியோடு போராட்டம்… உயிரோடு போராட்டம்… டாக்ரர்கள் பதட்டத்துடன்… அவளுக்காகவும், வெளியுலகைத் தரிசிக்க வரும் குழந்தைக்காகவும் பல மணி நேரமாய்ப் போராடுகிறார்கள்.



வலி தாங்க முடியாமல் அவள் கதறி அழுகிறாள். ஏதோ சொல்லிவிட அவள் உதடுகள் துடிக்கின்றன…



"ராகவா…" என்றாள்… தொடர்ந்து வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன.



"என்ன ராதா?…என்ன?… பயப்படாதே. .. நானிருக்கிறேனல்லோ?"



ராகவனின் கையை இறுகப் பற்றியபடி கதறி அழுகிறாள் ராதா. அவனுக்கு இதயம் மிக வேகமாக வலித்தது. அவனின் இதயம் அவனுக்கே அந்நியதாகத் தோன்றியது. இறைவன் மீது பாரத்தைச் சுமத்தினான். குழந்தை பிறக்கும் வரை அவன் அவனாக இல்லை.



அங்கே புதியதோர் உயிர்…ம்.. குட்டி ராதா.. அழுகையோடு உலகை எட்டிப் பார்க்கிறாள்…



சந்தோசம். அவன் மனதில் அளவில்லாத சந்தோசம். ஆனால்…



அங்கே அதுவரை அவனின் கையை இறுகப் பற்றியிருந்த அவளின் கை சோர்ந்து விழுந்தது. கண்கள் மேலே செருகிக் கொள்ள அந்தக் கணமே அவள் மூச்சும் நின்றது.டாக்ரர் அவனின் தோளைத் தட்டியவாறு …



"சாரி ராகவன்… உங்க மனைவி உயிரைக் காப்பாற்ற முடியல்ல"…. என்றார்.



"ஐயோ ராதா"… என அந்தக் கட்டிடமே அதிரும்படி குழறி அழுதான்.



ஓவெனக் கதறி அழுதான். முடியவில்லை… அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கதறினான். அவளையும், குழந்தையையும் நெஞ்சோடு அணைத்தவாறே கதறினான்.



யாரின் தேற்றலையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அங்கே யாருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாது கலங்கிப் போய் நின்றனர்.



விக்கித்து… விழி பிதுங்கி எதிர்கால வாழ்வின் அத்தனை கனவுகளும் ஒரு கணப் பொழுதில் கருகிக் கானலாகி விட….



ஒப்பற்ற ஓவியம் தீயிலிட்டுச் சாம்பலாகி விட்டது போல… கனவுச் சாம்ராஜ்ஜியம் சிதறிச் சிதைந்து போனது போல..அவனின் உயிர் ஓவியம்… அங்கே உயிர்ப்பிழந்து கிடந்தது.



குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்தவாறே அவன் எழுந்தான். அவன் நெஞ்சத் திரையில் அவள் முதன் முதலாய்… காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய நாளும்…



அதன் பின் எப்போதும் என்னவளாய் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விரல்கள் உரச நடந்து திரிந்த நாட்களும்… நான் உங்கள் கருவைச் சுமந்து அம்மாவாகி விட்டேன் என்று சொன்ன அந்த நாளும்… கடைசியாய் தந்த அந்த செல்லமான அன்பு முத்தமும்…



அனைத்தும் அவன் மனதில் பசுமையான நினைவுகளாய் நிழலாட….



அழும் குழந்தையின் முகத்தைப் பார்த்தவனாய்… தன் காதல் பரிசாகக் கிடைத்த குட்டி ராதாவை… தன் செல்ல மகளைத் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
Posted by Interior Design at 5:27 AM
Read On 0 comments

காதலர் தினம்

5:13 AM
கி.மு. 4ஆம் நூற்றாண்டில் உரோமானியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதிக் கொண்டு, சடங்குகளின் பெயரால், குலுக்கல் முறையில், பங்கு போட்டுக் கொண்டு, அனுபவித்து வந்தனர். உரோமானியர்கள், தாங்கள் அனுபவித்து வந்த பெண்களை ஆண்டுக்கு ஆண்டு அதே குலுக்கல் முறையில் மாற்றிக் கொள்ளவும் செய்தனர். அக்கொடுமை கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்து வந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் நடந்து வந்த காதல் கொடுமைக்குத் துணை நின்ற உரோமானிய அரசு, காதலுக்கும் காதல் வாழ்வுக்கும் தடை விதித்தது.தடுக்கப் பட்ட தடைவிதிக்கப் பட்ட காதலர்க்குத் துணைபுரிந்த பிஷ்ப் வேலன்டைன், சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கொலையும் செய்யப் பட்டார்.

உரோமானிய நாட்டின் காதல் கொடுமை முடிவுக்கு வந்தபின்னர், 'காதலர்க்கு துணைபுரிந்த 'வேலன்டைன்' நினைவைப் போற்றும் தினமாகக் "காதலர் தினம்" கொண்டாடப் படுகிறது. இதுவே, காதலர் தினக் கொண்டாட்டத்தின் சுருக்கமான வரலாறு.
Read On 0 comments

காதலை ஆதரிப்போம்!

4:59 AM
காதல் என்பது சமூக இருப்பில் தவிர்க்கமுடியாத பாத்திரத்தை எப்போதும் வகித்துவருகிறது.உலகின் எல்லா தத்துவங்களும் வரலாறுகளும் காதலைத் தவிர்த்துவிட்டு நகரமுடியவில்லை. உலகின் சிறந்த சிந்தனையாளர்கள் காதல்வயப்பட்டே வாழ்ந்திருக்கிறார்கள். மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதங்கள்,நாகம்மையின் மறைவுக்கு பெரியார் ஈ.வெ.ரா எழுதிய இரங்கல் கடிதம் ஆகியவை உலகின் தலைசிறந்த இலக்கியப்பிரதிகளில் ஒன்றாய் ஆகக்கூடிய இயல்பைக்கொண்டுள்ளன. நீட்சே தன் வாழ்க்கையில் மூன்றுமுறை காதலித்து மூன்றுமுறையும் தோற்றுப்போனவன்


காதல் என்பது வாழ்வின் ஆதாரமாகவும் மனித இயல்பின் ஆகப்பெரிய உச்சமாகவுமிருக்கிறது. இன்னொருவகையில் பார்த்தால் இந்தியச்சமூகத்தில் காதல் என்பது அரசியல் நடவடிக்கையாகவும் இருக்கிறது. "அகமணமுறை இந்தியச்சமூகத்தில் சாதியைத் தீவிரமாகப் பாதுகாத்துவருகிறது" என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். சாதியின் இருப்பைக் கேள்விகுள்ளாக்குவதாகவும் ஒற்றைப் பண்பாட்டை மறுக்கக்கூடியதாகவும் காதல் இருந்துவருகிறது. எனவேதான் சாதியை மறுக்கும் யாவரும் காதலை ஒத்துக்கொள்கின்றனர்.


ஆனால் காதலர் தினத்திற்கு இருசாராரிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. சிவசேனா போன்ற இந்துத்துவ இயக்கங்களும் மருத்துவர் ராமதாஸ் போன்ற தமிழ்க்கலாச்சாரவாதிகளும் காதலர்தினத்தை எதிர்க்கின்றனர். இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை காதலர்தினம் என்பது மேற்கத்தியப் பண்பாடு. ஆனால் அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை ஒருபோதும்முன்வைத்தவர்கள் அல்ல. கலாச்சாரத்தளத்தில் மட்டும் மேற்கத்தியப் பண்பாடு வேண்டாம் என்று கூக்குரலிடுவது சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் தந்திரமன்றி வேறில்லை.


ராமதாஸ்போன்ற கலாச்சாரப்போலீஸ்களைப் பொறுத்தவரை மந்திரக்கதைகளிலே ஏழுகடல், ஏழுமலை தாண்டி மந்திரவாதியின் உயிர் ஒரு குருவியின் உடலுக்குள் ஒளித்துவைத்திருபதைப் போல தமிழ்க்கலாச்சாரம் என்பது தொடைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது என்பது அவர்களின் வாதம்.


மார்க்சியர்களும் காதலர்தினத்தை எதிர்க்கின்றனர. அதற்கு அவர்கள் சொல்லும்காரணம் காதலர்தினத்தின் மூலம் வாழ்த்தட்டைகள் ஆகியவற்றை ஏகாதிபத்தியம் சந்தைப்படுத்த முயல்கிறது, நுகர்வுக்கலாச்சாரத்திற்கு அடிமைப்படுத்த முயல்கிறது என்பது. ஆனால் இன்று உலகமயமாக்கல் யுகத்தில் எல்லாமே சந்தையாக மாறியிருக்கிறது. இதைக்காரணம் காட்டிக் காதலர்தினத்தை மறுப்பது நியாயமாகத் தெரியவில்லை.


நுகர்வுக்கலாச்சாரத்தைத் தவிர்த்து சமயப்பண்டிகைகளுக்கு மாற்றாக கதலர்தினத்தைக் கொண்டாடும் வழிமுறைகள் குறித்து யோசிக்கலாம்.எபடியாயினும் காதல் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. நமது நாட்டார் தொனமங்கள் அனைவருமே காதலுக்காக சாதியை மறுத்து உயிர்விட்டவர்கள். காமமற்ற காதல், தெய்வீகக்காதல் போன்ற கற்பிதங்களிலிருந்து காதலை மீட்டெடுத்து நமக்கான காதலாக மாற்றுவோம். காலமெல்லாம் காதல் வாழ்க!
Read On 0 comments

ஐ லவ் யூ

6:38 AM

இந்த வார்த்தை படுத்தும் பாடுதான் என்ன? இதை சொல்லப் படும்பாடுதான் என்ன? அப்பப்பா....

இதோ ஐ லவ் யூ சொல்ல ஒரு சில ஆலோசனைகள்.... பயப்படாமல் செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்.

சொல்லும் காதல் தான் செல்லும். சொல்லாத காதல் செல்லாது. சொல்ல பயமாக இருக்கிறதா? அப்படியென்றால் இதில் எது உங்களுக்கு சரியெனத் தோன்றுகிறதோ அதை செய்யலாம்.

நீங்கள் விரும்பும் நபரை வெளியே அழைத்துச் சென்று, ஐ லவ் யூ என்று எழுதும்படி ஆர்டர் செய்து கேக் வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்.

ரேடியோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு போன் செய்து நீங்கள் காதலிப்பதை உணர்த்தலாமே?

உங்களது அல்லது உங்களுக்கு பிடித்தமானவரின் நண்பரிடம் பூ கொடுத்து அனுப்பலாம்.

உங்களது காதலை வாய்ஸ் மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பலாம்.

அவரின் கையில் கிடைக்கும்படி காதல் கடிதம் கொடுக்கலாம்.

வாழ்த்து அட்டை அல்லது கடிதத்தை தபால் மூலம் அனுப்பலாம்.

அவருடன் எங்கேனும் செல்லும்போது, காற்றில் எழுதும் பேனாவின் மூலம் எழுதிக் காட்டலாம்.

அவர்களைப் பற்றி கவிதை எழுதிக் கொடுக்கலாம்.

உங்களுக்கென தனி இணையதள முகவரியை தயார் செய்து அதன் மூலம் அவருக்கு உங்களது காதலை சொல்லலாம்.

ரொம்ப வித்தியாசமாக இருக்க வேண்டுமானால் உள்ளூர் நாளிதழில் அவருக்கு மட்டுமே புரியும் வகையில் விளம்பரம் கொடுக்கலாம்.

ரொம்ப வித்தியாசமாக இருக்க வேண்டுமானால் உள்ளூர் நாளிதழில் அவருக்கு மட்டுமே புரியும் வகையில் விளம்பரம் கொடுக்கலாம்.

இனிப்பு அடங்கிய பெட்டியில் காதலை சொல்லும் வாழ்த்து அட்டையை கொரியரில் அனுப்புங்கள்.

அவரது புகைப்படத்தைக் கொடுத்து ஓவியமாக வரைந்து வாங்கி அதை அவருக்கு அனுப்புங்கள்.

நீங்கள் எப்போதும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில் இதயத்தை வரைந்து அதில் உங்களது பெயரை செதுக்கி வையுங்கள்.

அவருக்குத் தேவையான, முக்கியமானதொருப் பொருளை வாங்கி பரிசாக அளித்து அவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களது காதலை உரையுங்கள்.

காதல் பாடல்களை ஒன்றாக சி.டியில் தொகுத்து பரிசாக அளிக்கலாம்.

உங்கள் துணையின் கையில் சிக்கும்படி பூங்கொத்தை வைத்து அதில் ஐ லவ் யூ என்று உங்கள் கைப்பட எழுதி வையுங்கள்.

காதல் அட்டையை மின்னஞ்சலில் அனுப்பலாம்.

ஒரு பேப்பரை எடுத்து அதனை இதய வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். அதில் "உனக்கு ஒன்று தெரியுமா? நீதான் எனது இதயத்தின் எஜமானி" என எழுதி அவரது கையில் கிடைக்கும்படி செய்யுங்கள்.

உங்கள் துணையை நீங்கள் காதலிப்பதற்கான 25 காரணங்களை எழுதி அவரிடம் அளிக்கலாம்.

உங்கள் துணையைப் பற்றிய பல்வேறு குறிப்புகளை அவருக்குத் தெரியாமல் அறிந்து கொண்டு அவரிடம் அதனை சொல்லி அசத்தலாம்.

வெற்றி நிச்சயம்..... வாழ்த்துக்கள்.
Read On 1 comments

மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!

6:32 AM

மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை (சாட்) அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.
நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...
சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.
சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.
அதற்கு என்னென்ன தேவை.... எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாதல்லவா அதற்காக....
இதோ
யாரிடமும் முதலில் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் அவரை நேரில் பார்க்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே மிக நிதானமாக உங்களது அறிவைப் பயன்படுத்தி அவரிடம் மெல்ல மெல்ல பழக வேண்டும். எதிலும் அவசரம் கூடாது.
டேட்டிங் மற்றும் சாட்டிங்கிலும் மிகுந்த பாதுகாப்பான இணையதளங்கள் உள்ளன. ஏனோதானோவென்று ஏதாவது ஒரு இணையதளத்தில் அல்லாமல் பாதுகாப்பான இணையதளத்தில் அரட்டை அடிப்பது நல்லது.
மின்னஞ்சலில் சாட் செய்யும் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள். மற்றவரிடம் அதையே எதிர்பாருங்கள். ஆனால் அவ்வாறே இருப்பார் என்று எப்போதும் நினைக்காதீர்கள்.
இன்னுமொரு விஷயம் என்னவென்றால்.... இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு முக்கிய இடமாகவும் இந்த அரட்டை அமைந்துள்ளது. இதில் தவறில்லை. ஆனால் எப்போதுமே அது சரியாகவும் இருப்பதில்லை. இதற்காக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது மின்னஞ்சல் அரட்டையில் ஈடுபடுவோரில் 15 விழுக்காட்டினர் திருமணமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (உடனே திருமணம் ஆனவர்கள் அரட்டை அடிக்கக் கூடாதா என்று கேட்காதீர்கள்.)
பல இணையதளங்கள் தற்போது அரட்டை அடிப்பவர்களின் விவரங்களை சுய பரிசோதனைக்குட்படுத்துதல், ஒப்புதல் பத்திரம் வாங்குதல் போன்றவையுடன், குற்றவாளிகளின் பட்டியலையும் உடன் வெளியிடுகிறது.
நீங்கள் அரட்டை அடிப்பவர் தன்னைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு குறைந்தபட்ச மதிப்பையே அளியுங்கள். ஏனெனில் அவர் அளிப்பதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதை அறிய இயலாது.
நீங்கள் அரட்டை அடிக்கும் நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிந்துகொள்ளாமல் உங்கள் முழுப் பெயரையோ, முகவரி, தொலைபேசி எண், பணியிடம் போன்ற எதையும் அளிக்க வேண்டாம்.
பொதுவாக மின்னஞ்சலுக்கும் சரி, அரட்டைக்கும் சரி நீங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் ஏதாவது செல்லப் பெயரை வைத்துக் கொள்வது அதிக பயனளிக்கும்.
ஒருவரைப் பார்த்தே ஓரளவிற்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். எனவே நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரின் புகைப்படத்தைக் கேட்கலாம்.
புகைப்படத்தை அனுப்ப ஏதேனும் சாக்குப்போக்கு சொன்னாலோ, அனுப்பாமல் இருந்தாலோ அவருடனான தொடர்பை குறைத்தோ அல்லது நிறுத்திக் கொள்வதோ நல்லது. அப்படியே அந்த புகைப்படத்தை அனுப்பினாலும் அது தற்போதைய புகைப்படம் அல்லது அவருடையதுதான் என்பதில் எந்த ஆதாரமும் இல்லையே.
கணினியின் திரையில் உங்களுடன் உரையாடும் நபரின் அரட்டைப் பேச்சும் அவரது குணநலனும் ஒன்றுபோல இருக்கும் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.
பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பது போலவும், பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், திருமணமாகாதவர் என்றும் கூறுபவர்கள் பயங்கர குண்டாகவும், வேலையில்லாமல் சுற்றித் திரிபவராகவும், கல்யாணமாகி பல குழந்தைகள் பெற்றெடுத்தவராகவும் இருக்கலாம்.
அப்பப்பா......... இவ்வளவு பிரச்சினைகளா? என்று பெருமூச்சு விடாதீர்கள். நீங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் மின்னஞ்சலில் அரட்டை அடித்து நல்ல நல்ல நண்பர்களையும் பெறலாம். அவர்களை ஆயுள் வரை நண்பர்களாகவும் தொடரலாம்.
Read On 1 comments

காதலா? இனக்கவர்ச்சியா?

5:48 AM

நீங்கள் கொண்டுள்ளது காதலா? Infractuation எனப்படும் இனக்கவர்ச்சியா? அறிய வேண்டுமா...?
உலகம் முழுவதும் பரவி இருக்கிற உன்னதமான உணர்வு எது? அது காதல்தான். காதலிக்கிறவங்களுடைய குணநலன்கள்ல வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைய இருக்கறது சகஜமான ஒண்ணு தான்.
ஆனா, காதல்ல வித்தியாசம் இருக்கலாமா? இருக்க கூடாதுல்ல... அதனால காதலுக்கும் Infractuationனு சொல்லப்பட்ற இனக்கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசங்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்களேன்.
இனக்கவர்ச்சி
தற்காலிகமாக ஒருவர் மீது ஏற்படும் விருப்பம்
பாதுகாப்பற்ற குற்ற உணர்வை ஏற்படுத்துவது.
சேர்ந்து இருப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தி கனவுகளை அழித்து விடும்.
நம்பிக்கையில்லாத தற்காலிக மகிழ்ச்சியை தரக்கூடியது.
சூழ்நிலைகளை பயன்படுத்தி தப்பித்து கொள்ள வேண்டும் என்ற சுயநல உணர்வை ஏற்படுத்துவது.
இனக்கவர்ச்சி என்பது அர்த்தமற்ற ஆபாச பாலுணர்வின் தூண்டுதல்.
இனக்கவர்ச்சியின் மறுபெயர் "பற்றாக்குறையான நம்பிக்கை".
இனக்கவர்ச்சியால் தூண்டப்பட்டு காரியங்கள் செய்து பின்னாளில் வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடியது.
காதல்
ஆழமான நட்புணர்வை உணரக்கூடிய அணையாத நெருப்பு
உண்மையான புரிதலை உருவாக்குவது.
உங்களவர் உங்களுக்கு தான் என்ற வலிமையான உள்ள அன்பை ஏற்படுத்துவது.
நம்பிக்கையினால் இரு உள்ளங்கள் இணைக்கப்படுவது.
பொறுமையாய் காத்திருந்து எதிர்காலத்தை திட்டமிட்டு காதலித்தவரை கைப்பிடிக்க வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கக்கூடியது.
பண்பட்ட நட்புணர்வின் உண்மை வெளிப்பாடு.
காதலின் மறுபெயர் நம்பிக்கை. எதிலும் எப்போதும் நம்புதல்.
காதல் உங்களை உயர்த்தும். உங்கள் எண்ணங்களை மேம்படுத்துவது. முன்பு இருந்ததை விட உங்களை சிறந்தவர்களாக்குவது.
Read On 2 comments

அவன் என்னை காதலிக்கிறானா?

5:42 AM

நீங்கள் ஒருவனை காதலிக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அவனிடம் சென்று "ஐ லவ் யூ" சொன்னால் எங்கே உங்கள் மூக்கு உடைந்து விடுமோ என்று பயமாக உள்ளதா?
அவன் உங்களை காதலிக்கிறானா என்று கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்.
அவன் உங்களை காதலிக்கிறான் என்றால் :
1.காரணமே இல்லாமல் தினமும் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வான்.
2.அவன் அம்மாவின் பிறந்த நாள் பரிசை தேர்ந்தெடுக்க உங்களை அழைத்துச் செல்வான்.
3.நாள் முழுவதும் செய்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்வான்.
4.அவன் உபயோகிக்கும் சென்ட், "ஆஃப்டர் ஷேவ்" ஆகியவை உங்களுக்கு பிடித்துள்ளதா என்று கேட்பான்.
5.ஒரே கதையை பத்து முறை சொன்னாலும் கவனத்துடன் குறிக்கிடாமல் கேட்பான். ( கேட்பது போலாவது நடிப்பான். )
6.உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்து கொள்வான்.
7.நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை விட உங்களோடு இருக்க விரும்புவான்.
8.நீங்கள் கேட்காமலேயே அவன் அடித்த லூட்டிகளை உங்களிடம் சொல்வான்.
9.நீங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு குறைந்தவர் இல்லை என்பதைப் போல் உங்களைப் புகழ்வான்.
10.எளிதில் அவனை புண்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ உங்களால் முடியும்.
மேலே உள்ளவற்றில் ஏழுக்கு மேல் பொருந்தினால் தைரியமாக "ஐ லவ் யூ" சொல்லலாம்.
Read On 0 comments

பெண்களிடம் ஆண்கள்

5:39 AM

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்

* சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.

* தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.

* சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

* காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...

* ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...

* நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

* எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...

* மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.
Read On 0 comments

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

5:24 AM

1.காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!
பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்.
2.காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!
காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.
உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!
3.காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!
சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி!நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.
4.அந்த விஷயங்களுக்கு அவசரப்படாதே!
எல்லாவற்றுக்கும் நேரம், காலம் இருக்கிறது என்று பெரிசுகள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அவசரப்பட்டால் சமயத்தில் பெரிய பிரச்னையில் போய் முடியும். எப்போதும் பொது இடத்திலேயே உங்கள் காதலன் / காதலியை சந்திப்பது நல்ல ஐடியா.
5.காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்! காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.
6.காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!
உங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள். உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்! நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.
7.அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!
காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள். உங்கள் பிறந்த நாளுக்குக் கூட உங்கள் ஆளுக்கு அன்பளிப்பு தரலாம்!காதலனாக இருந்தால் டை, சட்டை, புத்தகம், பேனா, டயரி, ஷேவிங் செட், அவருக்குப் பிடித்த படம் தியேட்டரில் ஓடினால் அதற்கு இரண்டு டிக்கெட், கொஞ்சம் நெருக்கம் என்றால் உள்ளாடைகள், இப்படி ஏதாவது வாங்கித் தரலாம்.காதலி என்றால் மலிவு விலையில் கம்மல்/தோடு, வளையல், சுரிதார், சல்வார் கமீஸ், புத்தகம், பேனா, கையடக்கக் கண்ணாடி, மேக்கப் சாதனங்கள், சினிமா டிக்கெட், ஏற்கனவே சொன்னது போல நெருக்கமாக இருந்தால் உள்ளாடைகள் ஆகியவற்றை வாங்கித் தரலாம்.
8.விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!
"ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது. காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள். ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.
Read On 0 comments

காதலியை கவர சில வழிகள்

5:20 AM

* எப்பொழுதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.

* ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் "நெய்ல் பாலிஷ்"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

* காதலுக்கு உண்மையான சாவி எது? அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான். அதனால் வாழ்க்கையை பொருத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? அப்படின்னு முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க...

* உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைங்க. அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது "டேட்டிங்" போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.

* ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க தங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்துகிட்டு உங்க காதலியை முழுமையாக தெரிஞ்ச்சு வைச்சுக்கங்க.

* இன்னொரு விஷயங்க... தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல, அப்படின்னா... அவங்க ரொம்பவே "டல்" ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதுல வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்ச வைச்சு அதை செயல்படுத்துறதுக்கு தொடங்குங்க.

* என்னங்க! இப்பவே ரெடி ஆய்ட்டீங்க போல!!!
Read On 1 comments

காதலிச்சுட்டு கல்யாணம்

5:19 AM
காதலன் : "டியர் என்ன இவ்வளவு வருஷமா காதலிச்சுட்டு கல்யாணம் செஞ்சுக்க மறுக்கிறியே, ஏன் உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா" காதலி : "ஆமாம் டியர், எனக்குன்னு ஒருத்தர் பொறக்காமலா இருப்பாங்க?"
Read On 0 comments

மகிழ்ச்சியா இருந்தேன்

5:17 AM
மனைவி : "உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ' சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்"
கணவன் : "பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியா இருந்தேன்"
Read On 1 comments

எவ்வளவு குழந்தைங்க?

5:16 AM
காதலன் தன் காதலியை திருமணத்திற்கு சம்மதிக்க எப்படி கேட்பது என்று தெரியாமல்.
அவன் : "ஏன் டியர் நீ என் குழந்தைக்கு தாயாக ஆசைப்படறியா"
அவள் : "நிச்சயமா! ஆமாம் உனக்கு எவ்வளவு குழந்தைங்க?"
Read On 0 comments

பொண்ணு

5:14 AM
சார் உங்க பொண்ணு என் மேலே பைத்தியமா இருக்கா,
அவளையே நான். . .
(அப்பா குறுக்கிட்டு)"
அவ ஒரு சரியான பைத்தியம்னா""
அதான் சார் என் மேல பைத்தியம்""
அதான் எப்படீன்னு புரியல"
Read On 0 comments

சாகாத காதல்

5:13 AM
பெண் : "நீ என்னை `லவ்' பண்றியா?"
ஆண் : "யெஸ், டியர்"பெண் : "எனக்காக சாகக்கூட துணிவியா?"
ஆண் : இல்லை டியர், என்னோடது `சாகாத காதல்'
Read On 0 comments

கல்யாணம்

5:11 AM
அம்மா : ஏண்டீ டெய்லி வேற வேற பையன்களோட சுத்தரியே உனக்கு ஒரு கல்யாணம் நடக்க வேண்டாமா
மகள் : "ஒரு கல்யாணம் நடக்காதும்மா.
Read On 0 comments

நண்பர்கள்

5:09 AM
இரண்டு நண்பர்கள் வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்.

முதலாமாவன் : உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா
இரண்டாமாவன் : கல்யாணம் ஆகி மனைவி இறந்து போய்விட்டாள்.
முதலாமாவன் : கொடுத்து வைத்தவன். ஆனால் என் மனைவி இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள்.
Read On 0 comments

வளையல்

5:08 AM
வாலிபன் ஒருவன் தன்னுடைய காதலிக்காக வளையல் வாங்க கடைக்குச் செல்கிறான்.
வாலிபன் : இந்த வளையல் எவ்வளவு
கடைக்காரர் : 5 ஆயிரம் ரூபாய்.வாலிபன்

ஒரு பெருமூச்சு விடுகிறான். மற்றொரு வளையலை பார்த்து இது எவ்வளவு
கடைக்காரர் : இது இரண்டு பெருமூச்சு. அதாவது 10 ஆயிரம் ரூபாய்.
Read On 0 comments

அம்மாவை காதலிக்கவில்லை

5:05 AM
ராஜன் : பிரேமி உன்னை நான் காதலிக்கிறேன்.
பிரேமி : என் அம்மாவுக்கு இந்த காதல் எல்லாம் பிடிக்காது.
ராஜன் : நான் உன் அம்மாவை காதலிக்கவில்லை. உன்னை தான் காதலிக்கிறேன்.
Read On 0 comments

காதலன்

5:03 AM
காதலன் : உன்னுடைய எல்லா கஷ்டங்களையும் நான் தீர்த்துவிடுவேன்.
காதலி : எனக்கு இப்பொழுது எந்த கஷ்டமும் இல்லையே.
காதலன் : நமக்கு கல்யாணம் ஆன பிறகு நிறைய கஷ்டம வரும்.
அதைச்சொன்னேன்.
Read On 0 comments

உலகம்

4:58 AM
காதலன்: நீ ஒரு வார்த்தை சொல். இந்த உலகத்தையே வென்று விடுகிறேன். இப்பொழுது சொல் நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா
காதலி : முடியாது
காதலன்: நன்றி! நன்றி! இதுதான் அந்த ஒரு வார்த்தை.
ஒரு பூங்காவில் இருவர் உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் கண்ணோடு கண், மனதோடு மனம் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
கணவன் : யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்
மனைவி : கணவன், மனைவி என்று நினைப்பார்கள்.
கணவன் : அப்படி இருந்தால் ஏன் பூங்காவிற்கு வர வேண்டும். வீட்டிலேயே இருப்பார்களே என்று நினைத்தால்
மனைவி : நாம் இப்படி வீட்டில் இருந்தால் உங்கள் மனைவியும் என்னுடைய கணவரும் சும்மா இருப்பார்களா?
Read On 1 comments

உன் கண்கள்

8:24 PM
உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை

உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்
Read On 1 comments

குழைதைத்தனம்

8:24 PM
இன்னும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது
உன் பொம்மைக் குழைந்தைக்கு
நான் தான் அப்பா என்று
அறிமுகப்படுத்திய உன்
குழைதைத்தனம்
Read On 0 comments

உன் துணையாகும்

8:22 PM
உன் துணையாகும்
வயதுதான் எனக்கு
இருந்தும்

திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்
Read On 0 comments

நீ நீலாதான்

3:10 AM
நீ நீலாதான் அதற்கான
சாட்சியங்கள் என்னிடம்
நிறையவே உண்டு

நீ நிலாதான் அதனால்
தான்நட்சத்திரங்கள் எனும்
கூட்டத்தோடு எப்போதும்
வருகிறாய்
Read On 0 comments

நீ வேண்டும்

3:09 AM
நிலா; நீ வேண்டும்
என்கிறது என் இரவுகள்

நிலா; நீ வேண்டும்
என்கிறது என் நட்சத்திரங்கள்

ஏன் தெரியுமா...?
எனக்கான துணை
நீ என்பதால்
Read On 0 comments

உனக்காக

3:08 AM
அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்

உன் இதயத்தில் ஓர்
இடம் வேண்டும் எனக்கு
ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான் இருக்கிறது
Read On 0 comments

வாசகன்மட்டுமல்ல

3:07 AM
நான் உன் கவிதைகளுக்கு
வாசகன்மட்டுமல்ல

உன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும் அவர்களின்
கண்ணாடியின் தூசு துடைக்கும்
வேலைக்காரனும் கூட
Read On 0 comments

பிழைகள் அதிகம்தான்

3:05 AM
என் கவிதைகளில்
எழுத்துப் பிழைகள்
அதிகம்தான்

என்னுடைய பிழைகள்
எல்லாமே நீ கவிதையாக
இருந்தும் எழுதியதே
Read On 0 comments

இதயத்தில் இருப்பவள்

3:04 AM
நீ
என் இதயத்தில் இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள் என்பதால்
தான்உன்னை காதலிக்கிறேன்
Read On 0 comments

இணைய ஸ்பெஷல்

3:00 AM
கூகிளிலும் ஆர்க்குட்டிலும்வந்து
விழும் நூறாயிரம்
பக்கங்களிலும் உன்னைத்
தேட முனைகிறேன்
உன்னிடம் பேசத் துணிவின்றி

!உன் பதிலிற்காக - என்
மெயில் பாக்ஸ் எப்போதும்
திறந்தே காத்திருக்கிறது!

வந்த ஒற்றை வரிப்
பதிலையும் எத்தனை முறை
வாசிக்க - இன்றாவது
பதிலிடு ஒற்றை வரியிலேனும்!
Read On 0 comments